Fedora 12: Constantine

Thursday, December 30, 2010

Get Together 2010 Update

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பெரிய தலைகள் பால்பாண்டியன், நாகேந்திரன், சிவப்பிரகாஷ், தமிழ் செல்வன் மற்றும் பலர் வர முடியாது என்று சொல்ல யாம் அமைத்த திட்டம் செயல் இழந்து விடுமோ என்ற அஞ்சிய வேலையில் நான் இருக்கிறேன் என்று துறை தலைவர் கே.சுந்தரராஜன் அவர்கள் தேம்பெற்றினார். சரியாக 9 மணிக்கு வருகிறேன் என்று சொன்ன அவர் 8:50 மணிக்கே வந்து கணினி ஆய்வகத்தை திறந்ததில் எனக்கு ஆச்சர்யம் ஒன்றுமில்லை.

நான் சரியாக 6 மணிக்கு மதுரையில் இருந்து புறப்பட்டு 10:30 மணிக்கு கல்லூரி வளாகத்தை சென்றடைந்தேன். எனக்கு முன்பாக அப்துல், பாக்யராஜ், ராஜ்குமார், சுப்ரமணியன், முருகேசன், முசிறி, ரேகா, சுந்தரராஜ்(மாணவன்), முரளி, பழனிவேல்ராஜன், நாகசுரேஷ் மற்றும் நான்கு கடைசி ஆண்டு கணினி துறை மாணவர்கள் குழுமி இருந்தனர். துறைத் தலைவர் அவர்களுக்கு செலுத்த வேண்டிய மரியாதையை செலுத்தி விட்டு நண்பர்கள் அனைவரிடமும் நலம் விசாரித்தேன். பிறகு நம் துறை சம்பிரதாயப் படி சாம்பிராணி தூவி புகையை கிளப்பி விட அனைவரும் உற்சாகமாயினர். இளஞ்செழியன் இன்னும் வராததால் வழக்கத்திற்கு மாறாக நானும் முசிறியும் சம்பிரதாயத்தை முடித்தோம். கடைசி ஆண்டு மாணவர்கள் செய்யாத வருத்தத்தை துறைத் தலைவருக்கு யாம் நீக்கினோம்.

பிறகு துறைத் தலைவரிடம் ஒவ்வொருவரும் தனியாகவும் குழுவாகவும் பேசினோம். சிலர் ஆசியும் பெற்றனர். பாக்யராஜிற்கு சித்திரை மாதத்திற்குள் திருமணம் நிறைவடையும் என்று ஆசி வழங்கியது குறிப்பிடத்தக்கது. வெளிநாட்டில் இருக்கும் தமிழ் செல்வன் மற்றும் வெளிநாட்டிற்கு செல்ல திட்டமிட்டிருப்பவர்கள் குறித்து வைத்து கொள்ளவும். திருமணத்திற்கு வரவில்லை என்றால் பாக்யராஜ் என்ன செய்வான் என்று உங்களுக்கே தெரியும்.

நாம் வருவதையொட்டி கடைசி ஆண்டு இளைஞர்களையும் யுவதிகளையும் வேலை வாய்ப்பு மற்றும் துறை சார்ந்த விசயங்களை அறிந்து கொள்ள அழைத்திருந்தார் துறைத் தலைவர்.

மணி 12 ஆகியும் அழைக்கப்பட்டிருந்த கடைசி ஆண்டு யுவதிகள் யாரும் வராததால் கொதித்துப் போன துறைத் தலைவர் பல்சர் வண்டியை எடுத்துக் கொண்டு பெண்கள் விடுதிக்கு பறந்து சென்று 10 நிமிடத்திற்குள் அவர்களை வர உத்தரவிட்டார்.

சரியாக 12:30 மணிக்கு வந்த நான்கு பேர் கொண்ட மகளிர் அணி ஏற்கனவே இருந்த நான்கு பேர் கொண்ட கடைசி ஆண்டு இளைஞர் அணியோடு இனைந்து எங்களுடன் கலந்துரையாடினர். துவக்கத்தில் அமைதியாக இருந்த மகளிர் அணி நேரம் ஆக ஆக கேள்வி கணைகளை தொடுத்தனர். கேள்விகளுக்கு பாக்யராஜ், முசிறி, பழனிவேல்ராஜன், ராஜ்குமார், நாகசுரேஷ், சுப்ரமணியன் மற்றும் இளஞ்செழியன் கார சாரமாக பதிலளித்தனர்.
நினைவில் நின்ற கேள்விகளும் அதற்கு நண்பர்களின் பதில்களும் இதோ:

கே: தொழில் நுட்ப (டிப்ளோமா) படிப்பிற்கு பிறகு வேலைக்கு செல்லலாமா அல்லது பொறியியல் படிக்கலாமா?
முசிறி: இந்த பட்டயத்தை வைத்து நாம் செல்லும் எந்த வேலைக்கும் நீண்ட கால உத்திரவாதம் இல்லை. ஆரம்பத்தில் திருப்தியை(காசுக்காக) இருக்கும் வேலை போகப் போக சலித்து விடும்.
பழனி: (முசிறியின் பதிலால் கொந்தளித்துப் போய்): நான் செய்யும் எந்த வேலையையும் இது நாள் (6 ஆண்டுகள் ஆகியும்) வரை எனக்கு சலித்ததில்லை.
ரேகா: எந்த வேலையையும் கஷ்டப்பட்டு செய்யாமல் இஷ்டப்பட்டு செய்தால் எப்போதுமே திருப்தியாகவே இருக்கும்.(என்ன தத்துவம் என்ன தத்துவம்).

கே: டிப்ளோமா படித்து முடித்து விட்ட பிறகு எங்கெங்கு வேலை பயிற்சி அளிக்கப் படுகிறார்கள்?
பாக்யராஜ்: பாரத மிகுமின் நிலையம் மற்றும் பல...

கே: பொறியியல் படிப்பிற்கு சேரும் பொது எந்தெந்த பாடங்கள் கடினமாயிருக்கும்?
துறைத் தலைவர்: கணிதம். அது எனக்கே கடினமாயிருந்தது என்று அவர் கூறியதை என்னால் நம்ப முடியவில்லை.

கே: டிப்ளோமா படிப்பை வைத்து என்னென்ன வேலைகள் கிடைக்கும்?
முசிறி: BPO
பழனி: BPO
சுந்தர்ராஜ்: வலைப்பக்கங்களை உருவாக்கலாம். வலைப்பக்கங்களை தட்டச்சு செய்து கொடுக்கலாம்.

கலந்துரையாடலின் போது அமைதியாய் உட்கார்ந்து கொண்டிருந்த ரேகா, சுய வேலை வாய்ப்பு நிபுணர், அவர்களை பேச அழைத்தேன். அவர் தான் செய்யும் வேலையை பற்றி மிக சுருக்கமாக(non detailed explanation) எடுத்துரைத்தார். இன்னும் விரிவாக விளக்கி இருக்கலாம். தொழில் ரகசியம் என்று நினைக்கிறேன். இந்த கலந்துரையாடல் இவ்வாறு முடிந்தது.

கலந்துரையாடலின் போது அப்துல் கூறிய கருத்து எனக்கு மிகவும் பிடித்து போனது. கேள்வி ஒன்றிற்கு அவர் அளித்த பதில் இதோ.
"பொறியியல் கண்டிப்பாக படிக்க போகிறோம் என்று முடிவெடுத்த பிறகு வேலை வாய்ப்பு முகாமிற்கு சென்று இன்னொருவருக்கு கிடைக்கின்ற வாய்ப்பை தட்டாதீர்கள்." இக்கருத்து அநேகமாக அனைவருக்கும் பிடித்திருக்கும் என்று நினைக்கிறேன்.

பிறகு நான், அப்துல், இளஞ்செழியன், முருகேசன் ஆகியோர் 2003 இல் விவாதித்த மலரும் நினைவு ஒன்றை எடுத்துரைத்தேன். அப்போது எங்களுடைய கனவில் ஒன்றானது டிப்ளோமா முடித்து விட்டு வலை மையம் ஒன்று நிறுவுவது. என்னால் அப்துலால் இளஞ்செழியன் ஆல் நிறைவேற்ற முடியாத கனவை முருகேசன் நனவாக்கியிருக்கிறார். அருகில் நகல் மற்றும் வலை மையத்தையும் நிறுவியிருக்கிறார். அது போதாது என்று கணினி பழுது பார்க்கும் மையத்தையும் வைத்து வெற்றி கரமாக நடத்தி கொண்டிருக்கிறார். முருகேசனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்!!
விரைவில் சென்னை மற்றும் மற்ற தலைநகரத்தில் கிளைகளை நிறுவி நம் துறை சார்ந்த மாணவர்களை தேர்ந்தெடுத்து வாய்ப்பளிப்பதை அடுத்த கனவாக வைத்திருக்கிறார். கனவு நிறைவேற அன்பனின் நல்வாழ்த்துக்கள்.

அதே போல் சுயமாக வேலை வாய்ப்பை உருவாக்கி கொள்ளும் ரேகாவிற்கும் எனது நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்!! விரைவில் திருச்சியில் அலுவலகம் திறக்க இருப்பதாக கூறினார். கனவு நிறைவேறட்டும்.

இந்த கலந்துரையாடலில் நான் என்ன செய்தேன் என்று கேட்கிறீர்களா? ஒன்றும் பெரிதாக செய்யவில்லை என்பதே நிதர்சனமான உண்மை. மீண்டும் அடக்கம் கற்றேன் மேற்கூரியவர்களிடமிருந்து.

பிறகு ஒவ்வொரு வருடமும் நம் குழு சார்பாக கணினி துறைக்கு புத்தகம் வழங்குவதை வழக்கமாக கொண்டிருக்கும் நாம் இம்முறை VB.NET மற்றும் PHP with MySQL Bible புத்தகங்களை வழங்கினோம். இப்புத்தகங்களை அடுத்த தலைமுறை மாணவர்கள் மிக நேர்த்தியாக பயன்படுத்துவார்கள் என்கின்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

இவையனைத்தையும் முடித்து விட்டு துறைத் தலைவரிடமும் கடைசி ஆண்டு மாணவர்களிடமும் விடை பெற்றுக் கொண்டு பாக்யராஜ் வீட்டிற்கு(ஒரத்தநாடு) விரைந்தோம். அங்கு சென்று சேர மணி 4 ஆகி விட்டது. மீன் வாசனை வாகனத்தில் இருந்து இறங்கும் போதே மூக்கை துளைத்தது. பாக்யராஜ் வீட்டில் முசிறி, ரேகா, முரளி தவிர மற்ற அனைவரும் மீன் குழம்பு ஒரு பிடி பிடித்தனர்.

பாக்யா,
மற்றொரு வேலைக்கு உன் அன்னை சென்று விட்டதால் அவரிடம் நன்றி சொல்ல முடியவில்லை(மீனுக்காக). அனைவர் சார்பாக நன்றியை தெரிவித்து விடவும்.

பிறகு அங்கிருந்து அவரவர் இடத்திற்கு களைந்து சென்றோம்.

அடுத்த குழுக்கூட்டம் எப்போது என்று இப்போதே மனது கேட்க்கிறது. காலம் அல்லது பாக்யாவின் திருமண நாளே அதற்க்கு பதில் சொல்லும்.

அன்பன்,
கார்த்திக் குமரன்.

http://picasaweb.google.com/gptdct/2010GetTogether#